மகாராஷ்டிராவில் 26 காவலர்கள் உட்பட 77 சிறைக்கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு

0 1081

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிறைவாசத்தில் இருந்த 77 கைதிகள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 8 சிறைகள் முன்னதாகவே தனிமைபடுத்தப்பட்டது. இருப்பினும், மும்பை ஆர்தர் சாலை சிறையில் 26 சிறை காவலர்கள் உட்பட 77 கைதிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனை அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உறுதிபடுத்தியுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சமையல்காரர் மூலம் இவர்களுக்கு தொற்று பரவியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிறைகளில் வைரஸ் பரவுவதை தடுக்க, ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான சிறைத்தண்டனை அனுபவிக்கும் 5,000 கைதிகளை பரோலில் விடுவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments