தமிழகத்தில் இருந்து 9 சிறப்பு ரயில்கள் இன்றிரவு இயக்கம்
தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்பவர்களுக்காக இன்றிரவு 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பீகாருக்கு ஒரு சிறப்பு ரயிலும், ஜார்க்கண்டிற்கு 2 சிறப்பு ரயில்களும், மேற்கு வங்கத்திற்கு 4 சிறப்பு ரயில்களும் சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கோவைமற்றும் வேலூரில் இருந்து தலா ஒரு சிறப்பு ரயில் மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மற்றும் ஜார்கண்டிற்கு புறப்பட்டு செல்கிறது.
இந்த 9 சிறப்பு ரயில்களும் இடைநில்லா ரயில்களாக இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. 9 சிறப்பு ரயில்கள் மூலம் 9 ஆயிரம் வடமாநிலத்தவர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் வடமாநில யாத்ரீகர்கள், தொழிலாளர்கள் நோயாளிகள் மற்றும் உடன் வந்தோர் ஆகியோர் இந்த சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர் திரும்புகின்றனர்.
Comments