பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் குறித்து டிரம்ப் அறிவிப்பு
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை சமாளிக்க புதிய கட்டுப்பாட்டு தளர்வுகளை அறிவிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கொரோனா அச்சத்தால் 5 ஆண்டுகளுக்கு மக்களை பூட்டி வைக்க முடியாது என்று கூறிய அவர், அடுத்த ஆண்டில் பொருளாதார ரீதியாக ஒரு பெரும் சவால் காத்திருப்பதாக தெரிவித்தார்.
வேலை வாய்ப்புகளை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்துவது, பொருளாதாரத்தை பழைய நிலைக்குக் கொண்டு வருவது போன்றவை மீது தமது அரசு கவனம் செலுத்தப்போவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார். பிரான்ஸ் ஸ்பெயின் இத்தாலி போன்ற நாடுகளுக்கு விமானப் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்து, பாதிப்புகள் சரிசெய்யப்பட்டபின் யோசிக்கலாம் என்றும் டிரம்ப் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களின் கணக்கில் நேரடியாக உதவித் தொகை செலுத்தப்படலாம் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
Comments