ஊரடங்கால் இந்தியாவில் சுமார் 2 கோடி குழந்தைகள் பிறக்க வாய்ப்பு - UNICEF
இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் சுமார் 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று ஐ.நா.வின் குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருப்பதால் உலகமெங்கும் 11 கோடியே 60 லட்சம் குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தமட்டில், வரும் டிசம்பர் 16ந் தேதிக்குள் 2 கோடியே 10 லட்சம் குழந்தைகள் பிறக்க உள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் பிரசவ பராமரிப்பு, உயிர்காக்கும் சுகாதார சேவைகள் பாதிக்கும் எனவும், இதனால் கர்ப்பிணிகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
Comments