அமெரிக்க அதிபர் டிரம்ப் உதவியாளருக்கு கொரனோ தொற்று
அமெரிக்க அதிபர் டிரம்ப் உதவியாளருக்கு கொரனோ தொற்று பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த ஒருஉதவியாளர் அதிபர் டிரம்ப்புக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமாக இருந்து உதவிகள் செய்வது வழக்கம். இத்தகைய உதவியாளரை வாலட் என்பார்கள்.
டிரம்பின் வாலட்டுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிபர் டிரம்புக்கும் துணை அதிபர் மைக் பென்சுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் இருவருக்கும் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அறிவித்த வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அதிபர் டிரம்பும் துணை அதிபர் மைக் பென்சும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.
Comments