JEE அட்வான்ஸ் தேர்வு ஆகஸ்ட் 23ந் தேதி நடைபெறும் - மனிதவள மேம்பாட்டுத் துறை
கொரொனா அச்சுறுத்தலால் ஒத்தி வைக்கப்பட்டு இருந்த ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு, வரும் ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெறும் என மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக மே 17ந் தேதி நடைபெறவிருந்த இந்த தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு ஆகஸ்ட் 23ல் நடைபெறும் என தெரிவித்துள்ளார். முன்னதாக, இதே போன்று ஒத்திவைக்கப்பட்டு இருந்த மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதியும், ஜேஇஇ முதன்மைத் தேர்வுகள் ஜூலை 18 முதல் 23 வரை நடைபெறும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments