மதுபாட்டில்கள் வாங்க ஆதார் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த கோரிக்கை
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்க ஆதார் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுத்தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.
மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்ய நாராயணா ஆகியோர், மது வாங்குவோர் ஆதார் எண் அளிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், பலரிடம் ஆதார் இல்லை என்பதால், அந்த நிபந்தனைக்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதே போன்று மதுபானம் வாங்க டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் கூட்டம் கூடுவதாகவும், கூடுதலாக மதுபாட்டில்கள் விற்கப்படுவதாகவும் வழக்கு தொடர்ந்தவரும் முறையிட்டுள்ளார். அனைத்து முறையீடுகளையும் வரும் 14ம்தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
Comments