சென்னையில் ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 2935
சென்னையில் ஒரே நாளில் 316 பேருக்கும் திருவள்ளூரில் 63 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 316 பேருக்கும் திருவள்ளூரில் 63 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. சென்னையில் மட்டும் 316 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி இருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2644 ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 63 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், பாதிப்பு 192 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரத்தில் மேலும் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 33 பேரும், கடலூரில் மேலும் 32 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூரில் 24 பேருக்கும், திருவண்ணாமலையில் 17 பேருக்கும், செங்கல்பட்டில் 13 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ராணிப்பேட்டையில் 7 பேருக்கும், திருச்சியில் 5 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 4 பேருக்கும் திருநெல்வேலி, தேனி மாவட்டங்களில் மேலும் தலா 3 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது.

திருப்பத்தூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கரூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக 2 பேர் கொரோனா வைரசின் பிடியில் சிக்கி இருக்கின்றனர்.

வேலூர், தூத்துக்குடி, கள்ளிக்குறிச்சியில் மேலும் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில் ஈரோடு, சிவகங்கை மட்டும் கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டங்களாக உள்ளன. தருமபுரி, திருப்பூரில் தலா இருவரும், நாகையில் ஒருவர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments