கோடக் மஹிந்திரா வங்கி ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் குறைப்பு
தனியார் வங்கியான கோடக் மகிந்திரா, ஆண்டுக்கு 25 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் பெறுவோரின் ஊதியத்தில் 10 சதவீதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அந்த வங்கியின் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைமை அதிகாரி சுக்ஜித் எஸ்.பரிக்சா, ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள குறிப்பில், கொரோனா வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருவதை காண்கையில், அதன் பாதிப்பு விரைவில் முடிவுக்கு வராது என்பது தெரிய வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதை கருத்தில் கொண்டு, கோடக் மகேந்திரா வங்கிக்கு ஆகும் செலவீனத்தை குறைக்கும் வகையில், ஆண்டுக்கு 25 லட்சத்துக்கும் அதிகமாக சம்பளம் பெறுவோரின் ஊதியத்தில் 10 சதவீதத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இது இம்மாதம் முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments