பயங்கரவாத தலைவர்களை கொல்வதற்கு முதல் முன்னுரிமை : பிபின் ராவத்
பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களை கொல்வதற்கு பாதுகாப்புப் படையினர் முதல் முன்னுரிமை கொடுப்பதாக முப்படை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் ரியாஸ் நைகு சுட்டுக் கொல்லப்பட்டார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, இதை சுட்டிக்காட்டிய ராவத், பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள்தான் வன்முறையை பரப்புவதாகவும், பொய் தகவல் மூலம் இளம்தலைமுறையினரை தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
ஆதலால் பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களை கொல்வதற்கு முதல் முன்னுரிமை கொடுத்து பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய பிபின் ராவத், பயங்கரவாத தலைவர்கள் கொல்லப்பட்டால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தாமாகவே பயங்கரவாத அமைப்பில் சேருவோரின் எண்ணிக்கையும், வன்முறையும் குறைந்து விடும் என்றார்.
Comments