கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் : காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க, பணியில் இருக்கும் காவல்துறையினர் ஒவ்வொரு வரும், தவறாது தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா பாதிப்புக்குள்ளான புதுப்பேட்டை மற்றும் நரியங்காடு காவலர் குடியிருப்புகளை நேரில் பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனி நபர் இடைவெளியை காவலர்களும் பணியின்போது பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
முக கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், கையுறை அணிவது உள்ளிட்ட அம்சங்களை காவலர்கள் அனைவரும் கடைபிடிக்குமாறு காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கேட்டுக்கொண்டார். இதனிடையே, சென்னை மாநகரில், 50க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் செய்தி : pic.twitter.com/a3mm8eZFiX
— GREATER CHENNAI POLICE (@chennaipolice_) May 4, 2020
Comments