நாட்டில் கொரோனா உச்சகட்ட தொற்று ஜூன்-ஜூலையில் நடக்கலாம்
நாட்டில் கொரோனா பரவும் வேகத்தை வைத்துப் பார்க்கும் போது, உச்சகட்ட தொற்று வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நிகழலாம் என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறி உள்ளார்.
டெல்லியில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்த அவர், நம்மிடம் இப்போது இருக்கும் புள்ளிவிவர மாதிரியின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், உச்சகட்ட தொற்றின் காலம் முன் பின் மாற வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.
அதே சமயம் ஊரடங்கை நீட்டித்துள்ளதால் கிடைக்கும் பலன், தொற்று பரவுவதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியனவும் உச்சகட்ட தொற்று காலத்தை முடிவு செய்வதில் முக்கிய இடத்தை வகிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
AIIMS Director: Cases of #Covid19 may peak in June-July
— चेतन सिंह - Chetan Singh (@ChetanNature) May 7, 2020
We have 52,952 infected members, causalities 1,783.
More test are required!#CoronavirusOutbreak pic.twitter.com/qaPCnCvt9s
Comments