நச்சு வாயுவின் தீங்கைத் தணிக்க தண்ணீர், பால் குடிக்கவும், வாழைப்பழம் தின்னவும் காவல்துறையினர் அறிவுறுத்தல்
விசாகப்பட்டினத்தில் நச்சுவாயுவின் தாக்கத்தைத் தணிக்கப் பால், தண்ணீர் குடிக்கவும், வாழைப்பழங்களைத் சாப்பிடவும் பொதுமக்களுக்குக் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
எல்ஜி தொழிற்சாலையில் ஸ்டைரீன் என்னும் நச்சுவாயு கசிந்ததில் பத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். வேதி ஆலையைச் சுற்றியுள்ளவர்கள் நச்சுவாயுவின் தீங்கைத் தணிப்பதற்கான வழிகளைக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், ஈரத்துணியை முகத்தில் கட்டிக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். கண் எரிச்சல் ஏற்பட்டால், நன்றாகக் கழுவியபின் கண்ணில் மருந்தை விடலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.
தோல் எரிச்சல் ஏற்பட்டால் சோப்பைப் பயன்படுத்தி நன்றாகக் கழுவ வேண்டும். பால், வாழைப்பழம், வெல்லம் ஆகியவற்றை உட்கொண்டு நச்சுவாயுவின் தாக்கத்தைத் தணிக்கலாம் என்றும் ஆந்திர காவல்துறையின் அறிவுறுத்தியுள்ளது.
Comments