மதுரையில் புகழ்பெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து
மதுரையில் புகழ்பெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்பட்டிள்ள நிலையில் மற்ற நிகழ்வுகள் ஆகம விதிப்படி நடைபெறும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழாவில் பௌர்ணமியன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் உலகப் பிரசித்தி பெற்றது. கொரோனா தொற்று காரணமாக அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து செய்யப்பட்டது.
அதே நேரத்தில் ஆகம விதிகளின்படி முக்கிய நிகழ்வுகளான மண்டுக மஹரிஷிக்கு மோட்சம் அளிப்பது மற்றும் புராணம் வாசித்தல் ஆகிய நிகழ்வுகள் நாளை நடைபெறும் என்றும், மேற்கண்ட நிகழ்வுகளை எட்டாம் தேதி மாலை நான்கு முப்பது மணி முதல் 5 மணி வரை www.tnhrce.gov.in என்ற இணையதளத்தில் மக்கள் கண்டு அழகரின் அருள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments