கொரோனாவை வேண்டுமென்றே பரப்பி உயிரிழப்பு ஏற்பட்டால் ஆயுள் தண்டனை - உ.பி. அரசு
கொரோனாவை வேண்டுமென்றே பரப்பி, உயிரிழப்பை ஏற்படுத்துவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டத்தை உத்தரப் பிரதேச அரசு கொண்டுவந்துள்ளது.
அந்த சட்டத்தின்கீழ், வேண்டுமென்றே பிறருக்கு கொரோனா பரப்பி, அதில் அந்த நபர் உயிரிழந்தால், அக்குற்றத்தை செய்வோருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை முதல் ஆயுள் தண்டனை வரையும், 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரிந்தே கொரோனா பரப்புதலில் ஈடுபடுவோருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறையும், 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளோர் மீது எச்சில் துப்புதல், குப்பை எறிதல் போன்ற செயலை செய்வோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறையும், 2 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Comments