ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1833 ஆக உயர்வு
ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 56 பேருக்குக் கொரோனா இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்துப் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 780 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்து 15 பேருக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிக அளவாகக் கர்நூல் மாவட்டத்தில் 540 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 373 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணா மாவட்டத்தில் 316 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
56 Corona Positive Cases recorded in #AndhraPradesh during the last 24 hours.With this total positive cases jump to 1833.
— All India Radio News (@airnewsalerts) May 7, 2020
Of the total cases, 780 patients have been recovered and successfully discharged pic.twitter.com/OhNEcSzDyG
Comments