சென்னையில் இதுவரை 2328 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னையில் இன்றைய நிலவரப்படி இதுவரை 2328 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 348 பேர் குணமடைந்த நிலையில் 22 பேர் உயிரிழந்தனர். 1952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள மண்டல வாரி பட்டியலின் படி, திருவொற்றியூரில் 40 பேரும், மணலியில் 13 பேரும், மாதவரத்தில் 30 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தண்டையார் பேட்டையில் 168 பேரும், ராயபுரத்தில் 375 பேரும், திரு.வி.க. நகரில் 412 பேரும் பாதிக்கப்பட்டனர். அம்பத்தூரில் 105 பேரும், அண்ணா நகரில் 191 பேரும், தேனாம்பேட்டையில் 285 பேரும் பாதிக்கப்பட்டனர்.
கோடம்பாக்கத்தில் 387 பேரும், வளசரவாக்கத்தில் 176 பேரும், ஆலந்தூரில் 14 பேரும் பாதிக்கப்பட்டனர். அடையாறில் 91பேரும், பெருங்குடியில் 20 பேரும், சோழிங்கநல்லூரில் 15 பேரும் பாதிக்கப்பட்டனர்.
Covid-19 status update in Chennai.#Covid19Chennai#GCC #Chennai#ChennaiCorporation pic.twitter.com/cozDDD9bMf
— Greater Chennai Corporation (@chennaicorp) May 7, 2020
Comments