சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி போராட்டம் நடத்திய வெளிமாநில தொழிலாளர்கள் மீது தடியடி
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில், சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கக்கோரி போராட்டம் நடத்திய வெளிமாநில தொழிலாளர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர்.
ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு உடனடியாக திரும்ப முடியாத நிலை காணப்படுகிறது. இதையடுத்து அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கூதாட்டுகுளம் ( Koothattukulam) எனுமிடத்தில் திரண்ட வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால், அங்கு சமூக விலகல் இல்லாததுடன், கொரோனா பரவல் அபாயமும் நேரிட்டது. இதைத் தொடர்ந்து, அவர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர்.
Comments