கொரோனா சிகிச்சைக்கு கங்கை நீரை பயன்படுத்தலாமா? மத்திய அரசின் பரிந்துரை மீதான முடிவை தள்ளிவைத்தது ICMR

0 2247

கங்கை நதியின் நீரை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் பரிந்துரை மீது முடிவெடுப்பதை, ஐசிஎம்ஆர் தள்ளி வைத்துள்ளது.

கங்கை நதி நீரில் ஆபத்தான வைரசுகளை அழிக்கக்கூடிய பாக்டீரியோஃபேஜ் என்ற வைரஸ் உள்ளதாகவும், எனவே கொரோனா சிகிச்சைக்கு கங்கை நீரை பயன்படுத்தலாம் என்று அதுல்யகங்கா என்ற அமைப்பு மத்திய நீர்வள அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது.

இது குறித்து ஆய்வு செய்த நீர்வள அமைச்சகத்தின் துறைகளான நேஷனல் மிஷன் ஃபார் கிளீன் கங்கா, நமாமி கங்கா திட்ட இயக்குதரகம் ஆகியன இது குறித்து முடிவு எடுக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலை கேட்டுக் கொண்டன. பிளாஸ்மா தெரபியை பயன்படுத்துவது உள்ளிட்ட ஆய்வுகளில் மூழ்கி உள்ளதால், இது பற்றி இப்போது முடிவெடுக்க இயலாது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்து விட்டதாகவும கூறப்படுகிறது.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments