ஊரடங்கு முடிந்த பிறகு, 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு

0 31588
ஊரடங்கு முடிந்த பிறகு, 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு

ஊரடங்கு முடிந்த பிறகு, 50 சதவீதத்திற்கும் குறைவான பயணிகளை கொண்டு பேருந்துகளை இயக்குவது மற்றும் அதுதொடர்பான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

அதில், தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க வேண்டும், 50 சதவிதத்திற்கும் குறைவான பயணிகள் கொண்டு பேருந்துகளை இயக்க வேண்டும், பேருந்தில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் தனி வழியை கடைபிடிக்க வேண்டும், குளிர்சாதன பேருந்துகளை தவிர்க்க வேண்டும், ஒவ்வொரு பயணத்துக்கு பிறகும் பேருந்தை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும், முகக்கவசம் அணியாத பயணிகளை பேருந்தில் ஏற்ற கூடாது, பேருந்தில் பயணிகளிடையே சமூக இடைவெளி இருப்பதை நடத்துனர் உறுதி செய்ய வேண்டும் பேருந்து கட்டணங்களை மொபைல் செயலி மூலம் பெறும் வசதியை ஊக்கப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஒவ்வொரு முறையும் பணிக்கு செல்லும் முன் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், முகக்கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும், நடத்துனரிடத்தில் கையை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments