கேரளாவில் SSLC , பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தேர்வு அறிவிப்பு

0 15133

கேரளாவில் மே 21 முதல் 29ம் தேதி வரை எஞ்சியுள்ள எஸ்எஸ்எல்சி, பிளஸ் ஒன், பிளஸ் டூ தேர்வுகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் சில பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தன. இந்நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எஞ்சியுள்ள 10ம் வகுப்பு பாடங்களுக்கான தேர்வுகள், 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வுகள் மே 21ம் தேதி தொடங்கி 29ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பது தாமதமானால், ஜூன் 1ம் தேதி முதல் கைட் விக்டோரியன் தொலைக்காட்சி (Kite Victorian channel) மூலம் ஜூன் 1ம் தேதி முதல் சிறப்பு கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும், செல்போன், இணையதளம் மூலம் அதை காண கூடுதல் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments