திருமழிசையில் காய்கறி சந்தை தயாராவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் வியாபாரிகள் ஏமாற்றம்
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் திட்டமிட்டபடி தற்காலிக காய்கறி சந்தை தயாராவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கோயம்பேடு காய்கறி சந்தை தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று முதல் திருமழிசையில் காய்கறி விற்பனை நடைபெறும் என கூறப்பட்டிருந்த நிலையில், காலை முதலே ஓரிரு வியாபாரிகள் காய்கறிகளுடன் அங்கு வந்திருந்தனர்.
ஆனால், சந்தை திறக்கப்படாததால் வந்திருந்த வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனிடையே, அனுமதியின்றி, வெளி மாநிலத்தில் இருந்து உருளைகிழங்கு ஏற்றி வந்த லாரிகளை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
Comments