ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய கெடு நீடிப்பு
2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருடாந்திர ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவலால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய ஊரடங்கு மே 17ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தொழில் நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர ஜிஎஸ்டி கணக்கை ஜூன் இறுதிக்குள் தாக்கல் செய்வது கடினம் என்பதால் வரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் மாத இறுதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது.
அதேபோன்று, கடந்த மார்ச் 24 அல்லது அதற்கு முன்பு உருவாக்கப்பட்ட மின்னணு ரசீது மே 31-ஆம் தேதி வரை செல்லுபடியாகும். மறைமுக வரிகள் வாரியம் ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
Notification No. 41/2020-Central Tax issued to extend the time limit for furnishing of Annual Return and Reconciliation Statement for the Financial Year 2018-19 till 30th September, 2020.
— CBIC (@cbic_india) May 6, 2020
Notification Link:- https://t.co/m4TJOC6Qb5
Comments