122 சிறப்பு ரயில்கள் மூலம் 1.25 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர் - ரயில்வே நிர்வாகம்
மே முதல் நாளில் இருந்து நேற்றுவரை சுமார் ஒன்றேகால் லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதற்காக 122 ஷார்மிக் ஸ்பெஷல் ரயில்களை இயக்கியுள்ளதாகவும் நேற்றுமட்டும் 42 ரயில்கள் இயக்கப்பட்டதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.72 இருக்கைகள் இருந்தாலும் சமூக இடைவெளிக்காக ஒவ்வொரு பெட்டியிலும் 54 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
கர்நாடக அரசு 10 ரயில்களை ரத்து செய்துள்ள போதும் பெங்களூரில் இருந்து பீகார் செல்லும் மூன்று ரயில்கள் வரும் நாட்களில் இயக்கப்பட உள்ளன. இது ஒருபுறமிருக்க டெல்லி மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரயிலுக்கும் பேருந்துக்கும் காத்திருந்த பல தொழிலாளர்கள் உணவுமின்றி வேலை வாய்ப்புகளும் இல்லாமல் சொந்த ஊர்களுக்கு பல நூறு கிலோமீட்டர்களைப் பொருட்படுத்தாமல் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
மும்பை தானே பகுதியில் இருந்து சில இளைஞர்கள் 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் உள்ள சொந்த ஊர்களுக்குச் செல்ல சைக்கிளை நம்பி பயணம் புறப்பட்டுள்ளனர்.
Comments