இனி கார்களில் தனி கேபின் அவசியம்...! கேரளாவின் அதிரடி
கால்டாக்சியில் பயணிப்போர் மூலம் கொரோனா தொற்று பரவுவதை தவிர்க்க இன்னும் ஒரு வருட காலத்திற்கு தனிகேபின் வசதியுடன் கார்களை இயக்க கேரள காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
கொரோன பரவுதலை தடுக்க கேரள அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் மூலம் கொரோனாவை கட்டுக்குள் வைத்து வருகின்றது. இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் விமான நிலையங்களில் இருந்து இயக்கப்பட உள்ள கால்டாக்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கால்டாக்சி ஓட்டுநர், மற்றும் பயணி இருவரும் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். பயணிகள் காரில் ஏறும் முன்பாக சானிடைசர் கொண்டு கையை நன்றாக சுத்தம் செய்திருக்க வேண்டும். காரில் பயணிப்போருக்கும் ஓட்டுநருக்கும் நடுவில் பைபர் கண்ணாடியிலான தடுப்பு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் பயணிகள் ஓட்டுநர் உடன் நேரடி தொடர்பில் இருக்க கூடாது.
முன்பக்க இருக்கையில் பயணிகளை ஏற்றவோ, அவர்கள் கொண்டுவரும் லக்கேஜ்களை ஏற்றவோ கூடாது. அவர்கள் கால்டாக்சியில் இறங்கிய பின்னர் அவர்கள் கைவைத்த இடத்தை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கேரள காவல்துறை அறிவுருத்தியுள்ளது.
இதே போல தமிழகத்திலும் இயல்பு நிலை திரும்பிய பின்னர் கால்டாக்ஸிகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Comments