திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் பணி தீவிரம்

0 2742

கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதை அடுத்து திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தைகள் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

கொரோனா நோய் தொற்றின் மையப்பகுதியாக கோயம்பேடு சந்தை மாறியதை அடுத்து, மூடப்பட்டு திருமழிசைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. திருமழிசையில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் துணைக்கோள் நகரத்தில் காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மொத்த வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்கும் வகையில் இடைவெளி விட்டு 200 தற்காலிக கடைகள் அமைக்கப்படுகின்றன.

காய்கறி வாங்க வரும் மொத்த வியாபாரிகளின் வசதிகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தண்ணீர் தொட்டிகள் நகரும் கழிப்பறை வசதிகள், வாகன நிறுத்துமிடங்கள், நுழைவு வாயிலில் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. நாளை முதல் இந்த தற்காலிக காய்கறி சந்தையானது செயல்படக்கூடிய நிலையில், கூடுதல் பணியாளர்களை கொண்டு பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments