சிமெண்ட், செங்கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் விலை திடீரென உயர்வு
ஊரடங்கு தளர்வுகள் அமலானதை அடுத்து கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ள நிலையில், சிமெண்ட், செங்கல், எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது.
3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள போதும், சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து 40 நாட்களுக்கு மேலாக முடங்கிக் கிடந்த கட்டுமான பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. இந்நிலையில் ஊரடங்குக்கு முன்பு 320 முதல் 360 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ அடங்கிய ஒரு மூட்டை சிமென்ட்டின் விலை, தற்போது 60 ரூபாய் வரை உயர்ந்து 420 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
முன்பு 6,000 ரூபாயாக இருந்த ஒரு யூனிட் எம்-சாண்ட் விலை 7,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. முறுக்கு கம்பிகள், செங்கல், ஜல்லி போன்றவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. ஊரடங்கால் வர்த்தகம் முடங்கிக் கிடந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments