டெல்லியில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக பொதுநல வழக்கு

0 1092

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள காலத்தில், திறக்கப்பட்ட மதுக்கடைகளை, உடனே மூட டெல்லி அரசுக்கு உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

42 நாள் இடைவெளிக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதை டெல்லிவாழ் குடிமகன்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். 70 சதவிகித வரி உயர்வை சுமத்திய பிறகும் 150 க்கும் மேற்பட்ட மதுக்கடைகளில் குடிமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் சிவில் சேப்டி கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளது.

மதுக்கடைகளுக்கு முன்னால் கட்டுக்கடங்காமல் திரளும் கூட்டத்தால், சமூக விலகல் 100 சதவிகிதம் புறந்தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கால் இதுவரை கிடைத்த பலன் அனைத்தும் வீணாகிவிடும் என தனது மனுவில் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments