ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் ரியாஸ் நைகு, கூட்டாளி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற பாதுகாப்புப் படையினருடனான சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் ரியாஸ் நைகு சுட்டுக் கொல்லப்பட்டான்.
பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய ரியாஸ் நைகு குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 12 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புல்வாமா மாவட்டம் பெய்க்போராவில் (beighpora) பகுதியில் சண்டையின்போது அவன் கைது செய்யப்பட்டதாக முதலில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ரியாஸ் நைகுவும், அவனது கூட்டாளியும் சண்டையில் கொல்லப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அவந்திபோராவின் சர்சாலி பகுதியில் மேலும் 2 பயங்கரவாதிகளும் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ரியாஸ் நைகு கொல்லப்பட்டிருப்பது ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்புக்கு பெரும் பின்னடைவாகவும், இந்திய பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாகவும் கூறப்படுகிறது.
Comments