ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1600 கோடி நிதியுதவி-கர்நாடக அரசு
ஊரடங்கால் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், நெசவாளர்கள், உள்ளிட்டோருக்கு 1600 கோடி ரூபாய் நிதி உதவியை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பெங்களூருவில் இதைத் தெரிவித்த முதலமைச்சர் எடியூரப்பா, பூ விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு மட்டும் 25,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.
மாநிலத்தில் உள்ள சுமார் 60,000 சலவைத் தொழிலாளர்களுக்கும், 2,30,000 முடி திருத்துவோருக்கும் தலா 5000 ரூபாய் ஒரே கட்டமாக வழங்கப்படும். இதேபோன்று டாக்சி, ஆட்டோ ஒட்டுநர்களுக்கு தலா 5000 ரூபாயும், கைத்தறி நெசவாளர்களுக்கு 2000 ரூபாயும், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கூடுதலாக 3000 ரூபாயும் வழங்கப்படும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகளுக்கு 2 மாத மின்கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
Comments