உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டோம்- இத்தாலி
உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக இத்தாலி அறிவித்துள்ளது.
ரோமில் உள்ள தொற்று நோய்க்கான ஸ்பாலன்சானி மருத்துவமனையில்நடந்து வந்த ஆய்வின் முடிவில் தடுப்பூசி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது என இத்தாலி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எலியிடம் இந்த தடுப்பூசியை சோதித்துப் பார்த்ததில் கொரோனா ஆன்டிபாடீஸ் உற்பத்தியானதாகவும் மனித உடலில் செலுத்தப்பட்டால் அது கொரோனை வைரசை அழித்து விடும் எனவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இப்போது பரவும் கொரோனா வைரசின் மரபணுக் கூறுகள் துவக்கத்தில் பரவிய வைரசை விடவும் மிக அதி வேகத்தில் பரவும் தன்மை வாய்ந்தது என அமெரிக்க லாஸ் அலாமோஸ் தேசிய ஆய்வக (Los Alamos National Laboratory)விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
Scientists have identified a new strain of the #coronavirus that has become dominant worldwide and appears to be more contagious than the versions spread in the early days of the #COVID19 pandemic, according to a new study led by scientists at Los Alamos. https://t.co/EIEBwwgsti
— Los Alamos Lab (@LosAlamosNatLab) May 5, 2020
Comments