அமெரிக்காவில் தொற்று பரவல் விகிதம் மட்டுப்படுத்தப்பட்டு விட்டது - அதிபர் டிரம்ப்
அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் விகிதம் மட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
அடுத்த கட்டமாக படிப்படியான பாதுகாப்புடன் கூடிய தளர்வுகள் கொண்டு வரப்படும் என அவர் கூறியுள்ளார். கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவில் தொற்று மற்றும் இறப்பு விகிதம் பலமடங்கு குறைந்துள்ளது.
இந்த நிலையில் ஃபோனிக்ஸில் உள்ள ஹனிவெல் தொழிற்சாலைக்கு சென்று டிரம்ப் பார்வையிட்டார். அங்கு உயர் தரம் வாய்ந்த என்-95 ரக மாஸ்குகள் உள்ளிட்ட உடல் பாதுகாப்பு கவசங்கள் 24 மணி நேரமும் உற்பத்தி செய்யப்படுவதை சுட்டிக்காட்டிய டிரம்ப், அதை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடக்கும் மிகவும் பரபரப்பான தொழிற்துறை உற்பத்தி என்றும் பாராட்டினர். அமெரிக்காவில் 12 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று பரவி, உயிரிழப்பு 71 ஆயிரத்தை கடந்துள்ளது.
Comments