லம்போர்கினி கார் வாங்குவதற்காக 3 டாலருடன் கலிபோர்னியாவுக்கு தனியாக பயணம் செய்த 5 வயது சிறுவன்

0 2765

அமெரிக்காவில் தனக்கு சொந்தமாக லம்போர்கினி கார் வாங்குவதற்காக வெறும் 3 டாலருடன் 5 வயது சிறுவன் நெடுஞ்சாலையில் கார் ஓட்டிச் சென்று போலீசாரை மிரள வைத்துள்ளான்

பரபரப்பான உட்டா நெடுஞ்சாலையில், மெதுவாக சென்று கொண்டிருந்ததை காரை சந்தேகத்தின்பேரில் போலீஸ் ஒருவர் நிறுத்தி, அருகில் சென்று பார்த்தபோது காரை 5 வயது சிறுவன் ஓட்டி வந்ததையறிந்து அதிர்ச்சியடைந்தார்.

மேற்கொண்டு விசாரித்ததில், தனக்கு லம்போர்கினி கார் வாங்கி தரச் சொல்லி தன் தாயிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டத்துடன் தனது பெற்றோரின் காரை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான். 3 டாலர்களுடன் கலிபோர்னியாவுக்கு சென்று லம்போர்கினி கார் வாங்க சிறுவன் திட்டமிட்டிருந்ததாகவும் உட்டா போலீசார் வீடியோவுடன் செய்துள்ள ட்வீட் வைரலாகி உள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments