கொரோனா அறிகுறி இல்லை எனச் சான்றிதழ் பெற வரிசையில் நின்ற தொழிலாளர்கள்
மும்பை அருகே டோம்பிவிலியில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்காகத் தனியார் மருத்துவமனை முன் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.
புலம்பெயர் தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக மே ஒன்றாம் தேதி முதல் நாள்தோறும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் செல்வதற்கு இவர்கள் கொரோனா அறிகுறி இல்லை என மருத்துவரிடம் சான்றுபெற்று அருகில் உள்ள காவல்நிலையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதைப் பரிசீலித்துக் காவல்துறை உயர் அதிகாரி பயணத்துக்கான அனுமதியை வழங்குவார். இந்நிலையில் மும்பையின் புறநகர்ப் பகுதியான தானே மாவட்டம் டோம்பிவிலியில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஏராளமானோர் மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்காகத் தனியார் மருத்துவமனை முன் காலையில் இருந்தே காத்து நின்றனர்.
Maharashtra: Scores of migrant workers were seen in long queues outside private medical clinics today in Dombivli city of Thane, to get medical certificates in order to obtain transit passes to return to their native places amid #COVID19 lockdown. pic.twitter.com/MtgZx9PIMb
— ANI (@ANI) May 6, 2020
Comments