ஆரோக்கிய சேது செயலி இல்லாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிப்பு - நொய்டா போலீஸ்

0 1182
ஆரோக்கிய சேது செயலி இல்லாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிப்பு

உத்தரப் பிரதேசத்தின் கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் செல்பேசியில் ஆரோக்கிய சேது செயலி இல்லாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா உள்ளவர்களையும், அவர்களின் தொடர்புகளையும் கண்டறிய உதவும் ஆரோக்கிய சேது என்கிற செல்பேசிச் செயலியைத் தேசியத் தகவல் மையம் உருவாக்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவை உள்ளடக்கிய கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் குடியிருப்போர், வெளியிடங்களில் இருந்து மாவட்டத்தில் நுழைவோர் இந்தச் செயலியைச் செல்பேசியில் வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கிய சேது செயலி இல்லாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருந்து அதில் ஆரோக்கிய சேது செயலி இல்லாமல் இருந்தால் அவர் மீது அரசின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை என்னும் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் ஆயிரம் ரூபாய் அபராதமோ, 6 மாதம் வரை சிறைத் தண்டனையோ விதிக்கப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments