80,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர் அழைத்து செல்லும் சிறப்பு ரயில்கள்
ஊரடங்கால் வேலையிழந்து தவித்து வரும் 80 ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல கடந்த 5 நாட்களில் 70 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை வரை 55 சிறப்பு ரயில்கள் மீட்பு பணியை முடித்துள்ளதாகவும், செவ்வாய்க்கிழமையன்று மேலும் 30 ரயில்கள் பெங்களூரு, சூரத், சபர்மதி, ஜலந்தர், கோட்டா, எர்ணாகுளம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து மீட்பு பணியை துவங்கியுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ரயில் மூலமும் தலா ஆயிரம் பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகள் முன்வைக்கும் தேவைக்கு ஏற்ப ரயில்கள் இயக்கப்படும் என்றும், மேலும் 500க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments