இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கியது
இந்தியாவில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதேபோல் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்து 700ஐ நெருங்கியுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று நோய் பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. மத்திய சுகாதார துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 49 ஆயிரத்து 391ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் பலி எண்ணிக்கையும் ஆயிரத்து 694ஆக உயர்ந்துள்ளது.நேற்றிரவு நிலவரத்துடன் ஒப்பிடுகையில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 958ம், பலி எண்ணிக்கை 126ம் அதிகரித்துள்ளது.
இதுதவிர்த்து நாடு முழுவதும் 33 ஆயிரத்து 514 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சக புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று நோயால் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை 500ஐ தாண்டி 15 ஆயிரத்து 525ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் பலி எண்ணிக்கையும் 617ஆக உயர்ந்துள்ளது. 2ம் இடத்திலுள்ள குஜராத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 245ஆக அதிகரித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 368ஆக கூடியுள்ளது. 3ம் இடத்திலுள்ள டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 104ஆக உயர்ந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 64ஆக உள்ளது.
4ம் இடத்திலுள்ள தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 58ஆகவும், பலி எண்ணிக்கை 33ஆகவும் உள்ளன. 5ஆவது இடத்தில் உள்ள ராஜஸ்தானில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 158ஆகவும், பலி எண்ணிக்கை 89ஆகவும் உள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சையில் இதுவரை 14 ஆயிரத்து 183 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் இதுவரை 2 ஆயிரத்து 819 பேர் குணமாகியுள்ளனர்.இதற்கடுத்து ராஜஸ்தானில் ஆயிரத்து 500க்கு மேற்பட்டோரும், தமிழ்நாட்டில் ஆயிரத்து 400க்கு மேற்பட்டோரும் குணமடைந்துள்ளனர்
Comments