இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து 75 ஆண்டுகள் ஆனதையொட்டி ரஷ்யா சார்பில் வட கொரிய அதிபருக்கு விருது

0 1432

இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து 75 ஆண்டுகள் ஆனதையொட்டி, வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு ரஷியா விருது வழங்கியுள்ளது.

1939 முதல் 1945 வரை 2ம் உலகப்போர் நடைபெற்றது. இந்தப்போரின்போது வட கொரியப் பகுதியில் உயிரிழந்த ரஷிய வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் செயல்பட்டதற்காக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு ரஷியா சார்பில் விருது வழங்கப்பட்டது.

அந்த விருது வழங்கும் விழா வட கொரியத் தலைநகர் பியாங்யாங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்த விழாவில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் னுக்குப் பதிலாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ரி சாங் குவான் அந்த விருதைப் பெற்றுக் கொண்டர். வட கொரியாவுக்கான ரஷிய தூதர் அலெக்ஸாண்டர் மாத்செகோரா அந்த விருதை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments