மகாபோதி புத்தர் கோயில் மூடப்பட்டுள்ளது
பீகார் மாநிலம் கயாவில் உள்ள மகாபோதி புத்தர் கோயில் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
புத்த ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்த கோயிலில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்து புத்த பகவானை தரிசிப்பது வழக்கம் ஆகும். தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மகாபோதி கோயில் மூடப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு புத்த ஜெயந்தியை பக்தர்கள் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Comments