ரூ.2,800 கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகள் மீண்டும் தொடக்கம்

0 2484

தமிழகத்தில் சுமார் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான 3 முக்கிய, சலை மேம்பாட்டு திட்டத்திற்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பணிகள், தற்போது கட்டுமானப் பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக மீண்டும் தொடங்க உள்ளது. அதன்படி, திருச்சி-சிதம்பரம் சாலையை கல்லகம் வரையில் நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.

மீன்சுருட்டி - சிதம்பரம் இடையே இரண்டு சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளும், புலம் பெயர் தொழிலாளர்கள் இல்லாததால் உள்ளூர் ஆட்களை கொண்டு மேற்கொள்ளப்பட உள்ளது. இதேபோன்று திண்டிவனம்-கிருஷ்ணகிரி மற்றும் பொள்ளாச்சி - கோயம்புத்தூரை இணைக்கும் சாலைகளை மேம்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட உள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments