சுமார் 300 துணை ராணுவ படையினருக்கு கொரோனா பாதிப்பு எனத் தகவல்

0 2133

நாடு முழுவதும் சுமார் 300 பேர் வரையிலான துணை ராணுவப்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், பாதுகாப்பு படை வீரர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் 158 சிஆர்பிஎப் வீரர்கள், 69 எல்லையோர பாதுகாப்பு படை வீரர்கள், இந்தோ-திபெத் பாதுகப்பு படையை சேர்ந்த 46 பேர் உள்ளிட்டோர், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலர் குணமடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக அவர்களுடன் தொடர்பில் இருந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக உயரதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments