சர்வதேச சந்தையில் போலி கொரோனா பரிசோதனை கருவிகள் விற்பனை

0 629

சர்வதேச சந்தையில் போலியான கொரோனா பரிசோதனை கருவிகளின் விற்பனை அதிகம் இருப்பதால் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அனைத்து மாநில காவல் துறையினருக்கும் சிபிஐ அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ‘இண்டர்போல்’ தனது 194 உறுப்பு நாடுகளுக்கும் தகவல் அனுப்பியுள்ளது. அதன் அடிப்படையிலே சிபிஐ சார்பில் இந்த முன்னெச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது.அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து எந்த நாட்டுக்கும் கொரோனா பரிசோதனை கருவிகள் ஏற்றுமதி செய்யப்படவில்லைஎன்ற தகவலையும் சிபிஐ தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments