தெலுங்கானாவில் 144 தடையுத்தரவு மே 29 வரை நீட்டிப்பு
தெலுங்கானாவில் 144 தடையுத்தரவு இம்மாதம் 29ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மே 7 வரை தடையுத்தரவு அமலில் இருந்து வந்தது. தற்போது 29 ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணிமுதல் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் திறந்திருக்கும் என்றும் மாலை 6 மணிக்குள் அனைவரும் வீடு திரும்ப வேண்டும் என்றும் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். ஏழு மணிக்கு மேல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் வீதிகளில் இரவு ஏழு மணிக்கு மேல் நடமாடினால் கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
இதனிடையே 2200 மதுக்கடைகளைத் திறக்க அனுமதித்துள்ள தெலுங்கானா அரசு 16 சதவீதம் வரை மதுவின் விலையை அதிகரித்துள்ளது.
Comments