இந்தியாவில் ஒரே நாளில் 3,900 பேருக்கு கொரோனா தொற்று....

0 2377

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், இதுவரை 1568 பேர் பலியாகி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 900 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 195 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறினார். அதே போன்று ஒரே நாளில் 1020 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவித்தார். குணமடைவோரின் விகிதம் 27.41 சதவீதமாக இருப்பதாகவும் அகர்வால் குறிப்பிட்டார். 

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 14 ஆயிரத்து 541 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் இதுவரை 583 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 5 ஆயிரத்து 800ஐ கடந்து விட்டது. அங்கு மொத்தம் 319 பேரின் உயிரை கொரோனா பறித்து விட்டது. டெல்லியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4900ஐ நெருங்கி இருக்கிறது. ராஜஸ்தானில் 3 ஆயிரத்து 61 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் 2766 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கம், தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் 46 ஆயிரத்து 433 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1568 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், 12 ஆயிரத்து 727 பேர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments