அமெரிக்காவில் ஊரடங்கு தளர்வு அளித்துள்ளதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு
அமெரிக்காவின் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றால் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கக்கூடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நோய் சீற்றம் அதிகமாக உள்ள அமெரிக்காவில் இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நோய் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், பொருளாதாரம் ஸ்தம்பித்து 3 கோடிக்கும் அதிகமானோர் வேலையின்மை சலுகைகளை பெற விண்ணப்பித்துள்ளனர்.
இதன்பொருட்டு 20க்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஊரடங்கில் தளர்வு அளித்துள்ளதால், ஜூன் 1 ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கக்கக்கூடும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Comments