30 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்ய கடலாதிக்க பகுதியில் அமெரிக்கா
ஆர்ட்டிக் கடலில் ரஷ்யா தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது என கடந்த ஆண்டு முதலே கூறி வரும் அமெரிக்கா, இப்போது தனது 3 நாசகாரி போர்க்கப்பல்களை அதில் செலுத்தி தனது போர்த்திறனை சோதித்துள்ளது.
ரஷ்யா மற்றும் நார்வேக்கு இடையே இருக்கும் ஆர்ட்டிக் பகுதியான பேரன்ட்ஸ் கடலில் (Barents Sea) 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் டொனால்டு குக், போர்ட்டர், ரூஸ்வெல்ட் ஆகிய போர்க்கப்பல்கள் பயணித்தன.
கடற்வழி பயண சுதந்திரத்தை மதிப்பீடு செய்யவும், கூட்டு நாடுகளுடன் தடையின்றி இணைந்து செயலாற்றுவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் ரஷ்யா நார்வே இடையே, நாட்டோவின் வான்பகுதியில் அண்மை காலமாக உருவாகி உள்ள பதற்றமும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
Comments