சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 357ஆக உயர்வு
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 357ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் ஏதேனும் ஒரு பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டால் அந்தப் பகுதி முழுவதும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுக் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்படுகிறது.
இந்தப் பகுதியில் வெளியாட்கள் உள்ளே வரவும், உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 357 ஆக அதிகரித்துள்ளது.
திருவிக நகர் மண்டலத்தில் 70 இடங்களும், ராயபுரம் மண்டலத்தில் 80 இடங்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 37 இடங்களும், வளசரவாக்கம் மண்டலத்தில் 32 இடங்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 15 இடங்களும் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக உள்ளன.
கடந்த வாரம் 233 ஆக இருந்த கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை ஐந்தே நாட்களில் 357ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments