மலேசியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது

0 1433
ஊரடங்கு காரணமாக மலேசியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வருவது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு 11ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

ஊரடங்கு காரணமாக மலேசியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வருவது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு 11ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

ஊரடங்கு அமர்வால் சர்வதேச விமான போக்குவரத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மலேசியா சென்ற 350க்கும் மேற்பட்ட இந்தியர்கள், அங்கிருந்து நாடு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர்.

அவர்கள் நாடு திரும்பி வர நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஞானசேகர் என்பவர் மனு தொடர்ந்திருந்தார்.

மனு மீதான விசாரணையின்போது, மத்திய அரசுத்தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் கோரப்பட்டது.இக்கோரிக்கையை ஏற்று அவகாசம் வழங்கி, விசாரணையை 11ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments