பெங்களூருவில் உ.பி., பீகார் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் திடீர் மறியல்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஆயிரகணக்கானோர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொந்த மாநிலம் திரும்பிச் செல்ல வந்த உத்தரப் பிரதேசம், பீகார் மாநில தொழிலாளர்கள், பெங்களூருவில் உள்ள சர்வதேச கண்காட்சி மையம் அருகே தங்க வைக்கப்பட்டனர்.
அவர்கள் நேற்று மாலை பெங்களூரு, துமாகுரு (Tumakuru) இடையேயான நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் வருவாய்த்துறை அமைச்சர் அசோக், காவல் ஆணையர் ஆகியோர் விரைந்து வந்து சமரசம் பேசினர்.
அப்போது சொந்த மாநிலங்களுக்கு அவர்கள் திரும்பி செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Comments