கொரோனா தொற்றுநோய் சமூக பரவலாக மாறவில்லை : மத்திய அரசு
இந்தியாவில், கொரோனா தொற்றுநோய் பாதிப்பு, சமூக பரவலாக மாறவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
நாட்டில், கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், கொரோனா பாதிப்பு, 3ஆவது நிலையை எட்டிவிட்டதோ என்ற ஐயம் பரவலாக எழுந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், நாட்டில், கொரோனா தொற்றுநோய் பாதிப்பு, இதுவரையில், சமூக பரவலாக மாறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் "கம்யூனிட்டி டிரான்ஸ்மிஷன்" அல்லது "கம்யூனிட்டி ஸ்பிரட்" என அழைக்கப்படுவதற்கு, தமிழில் "சமூக பரவல்" என்றும், சில தருணங்களில் சமூக தொற்று என்றும் அழைக்கப்படுகிறது.
ஒருவரிடமிருந்து, ஒருவருக்கு கொரோனா பரவும்போது, அது எப்படி பரவியது என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலையே, சமூக பரவல் அல்லது சமூக தொற்று எனப்படுகிறது.
Comments